முகப்புஹாலிவுட்

ரஜினியின் ‘அண்ணாத்த’ 2021 பொங்கலுக்கு வெளியாகாது..?

  | June 17, 2020 19:32 IST
Annaatthe

இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியீட்டை மாற்றி அமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

‘தர்பார்' திரைப்படத்தையடுத்து ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 168-வது திரைப்படமாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த'.

'அண்ணாத்த' படத்தில் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவை கையாளுகிறார். சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் இப்படம் மூன்றாவது படைப்பாகும்.

கடந்த மாதம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' 2021 பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. ஆனால், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோடப்படவுள்ளதாக கூறபடுகிறது. 

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டபோது, ஏழு மாத காலக்கெடுவுடன் அனைத்து வேலைகளையும் படக்குழு முடிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனா வரஸ் தொற்றின் அபாயம் கூடிக்கொண்டே இருப்பதால், இதன் படப்பிடிப்பு எதிர்பார்த்தபடி நடைபெருமா என்பது சந்தேகமாக உள்ளது. இதன் காரணமாக இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியீட்டை மாற்றி அமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com