முகப்புஹாலிவுட்

Terminator Dark Fate ! அர்னால்டு பட டிரெய்லரை வெளியிட்ட ஆர்யா!

  | October 22, 2019 16:36 IST
Terminator Dark Fate

துனுக்குகள்

 • டெர்மினேட்டர் படத்தின் தமிழ் டிரெய்லரை ஆர்யா வெளியிட்டார்
 • நவம்பர் 1ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது
 • ஆர்யா தற்போது டெடி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்
 
உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது.
 
உலகமெங்கிலும்  Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார்  Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக  Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது.
 
உலகளவில் ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு சிறப்பித்தார்.
 
டிரெய்லர் வெளியிட்டு அவர் பேசியதாவது ...
 
ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இவ்வளவு நாள் ஜிம் போனது இப்பத்தான் உதவிருக்கு. அர்னால்ட் பட டிரெய்லர் லான்ஞ் பண்ண என்ன கூப்பிட்டிருக்காங்க. ஜிம் போற எல்லாருக்கும் அர்னால்ட் பத்தி தெரிஞ்சிருக்கும். அவரோட டெர்மினேட்டர் உலகம் முழுக்க ஃபேமஸ். அவரோட டிரெயலர்  நான் வெளியிடறது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
 
 
ஒவ்வொரு முறை டிரெய்லர் பார்க்கும் போதும் நிறைய டீடெயில் தெரியுது. அந்தளவு பிரமாண்டமா உழைச்சிருக்காங்க. அவரோட பயங்கர ஃபேன். True lies, Conan the barbarian, terminator என எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.
 
ஜிம் போற எல்லாருக்கும் அவர தெரியும். ஸ்டார இருக்கறதால மட்டும் அவர் ஃபேமஸ் கிடையாது இப்ப வரைக்கும் அவரோட ஃபேமஸ்ஸுக்கு அவரோட கட்டுக்கோப்பான உடலும் காரணம். அப்பவே அவர் 7 முறை  உலக அழகன் பட்டம் வாங்கிடார். இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும் அவர் ஆக்‌ஷன் பண்ணும்போது அவ்வளவு அழகா இருக்கும்.  திரும்பவும் அவரோட ஆக்‌ஷன் பாக்கப்போறோங்கிறதே பெரிய மகிழ்ச்சி தான்.
 
7homrssg
 

அவர் 7 முறை ஆணழகன் பட்டம் ஜெயிச்சிருக்கார். 5 வருஷம் கழிச்சி ஒரு முறை ஜெயிச்சிருக்கார்.  ஜிம் போறதால எனக்கு தெரியும் கொஞ்சம் இடைவேளை விட்டுட்டு திரும்ப பண்றது ரொம்ப கஷ்டம். எப்படி அவரால முடிஞ்சதுனு கேட்கனும். உலகம் முழுக்க அர்னால்ட் ஜிம் ஒர்கவுட்னே நிறைய இருக்கு இத சாதிக்கறது சாதாரணம் கிடையாது. உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.
 
நவம்பர் 1 படம் வருது இங்க அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு எல்லொரும் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க என்றார்.
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com