முகப்புஹாலிவுட்

"Wakanda நாயகன் காலமானார்" - சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் திரையுலகம்..!

  | August 29, 2020 09:29 IST
Wakanda Forever

துனுக்குகள்

 • 2003ம் ஆண்டு Third Watch என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது
 • அந்த படத்தில் Black Panther என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்தார் சாட்விக்
 • கடந்த சில வருடங்களாகவே குடல் புற்றுநோயின் 3ம் கட்டத்தில் போராடி வந்த
2003ம் ஆண்டு Third Watch என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது திரைக்கனவை தொடங்கிய மனிதன் தான் சாட்விக் போஸ்மேன். அதன் பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த இவர் 2008ம் ஆண்டு வெளியான The Express என்ற படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார். 42, Gods of Egypt போன்ற பல சுவாரசியமான படங்களில் நடித்த இவருக்கு வரப்பிரசாதமாக கிடைத்த ஒரு வாய்ப்பு தான் ஆண்டனி மற்றும் ஜோ இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பெரிய ஹிட்டான கேப்டன் அமெரிக்கா திரைப்படம். 

அந்த படத்தில் Black Panther என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்தார் சாட்விக், இவர் தான் கருப்பர் இனத்தில் இருந்து நடிக்க வந்து முதலில் சூப்பர் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பறின மக்கள் பலர் கொண்டாடும் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்தார் சாட்விக். avengers படத்தின் இவருக்கான அறிமுக காட்சி வரும் வேளையில் அரங்கம் அதிர்ந்ததே இவர் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி. 

கடந்த சில வருடங்களாகவே குடல் புற்றுநோயின் 3ம் கட்டத்தில் போராடி வந்த இவர் தற்போது சிகிச்சை பலன் இன்றி காலமானார். 43 வயது மட்டுமே நிரம்பிய இவருடைய மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹாலிவுட் மட்டும் இன்றி உலக சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் தங்குளுடைய இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com