முகப்புஹாலிவுட்

‘ஜேம்ஸ் பாண்டு 007 : No Time To Die’ பட ட்ரைலர் வெளியானது..!

  | December 06, 2019 17:40 IST
James Bond

துனுக்குகள்

  • ‘நோ டைம் டு டை' திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார்.
  • இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
  • நோ டைம் டு டை ஏப்ரல் 2-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது
ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் மீண்டும் டேனியல் கிரெய்க் நடித்திருக்கும் புதிய திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்' பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ஸ்பெக்டர் திரைப்படம் படக்குழுவுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அதைத்தொடர்ந்து ‘நோ டைம் டு டை' ஒரு நல்ல படமாக இருக்கும் என்று ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், டேனியல் கிரெய்கின் கடைசி முயற்சியாக, தற்போது இப்படத்தின் முதல் டிரெய்லர் வெளிவந்துள்ளது.
டேனியல் கிரெய்க், தனது முந்தைய மூன்று பாண்ட் படங்களிலும் செய்ததை விட அதிகப்படியான சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்கிறார். நேற்று, டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, இப்படத்தின் ஆறு முக்கிய கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்