முகப்புஹாலிவுட்

"இது தான் தீர்வு" - கொரோனா பாதித்த டாம் ஹாங்க்ஸ் சொல்லும் அட்வைஸ்

  | March 24, 2020 10:47 IST
Tom Hank

துனுக்குகள்

  • இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
  • இரண்டு வாரங்களுக்குப் பிறகு தானும் தனது மனைவியும் நலமாக உள்ளோம்
  • யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம்
1977ம் ஆண்டு வெளியான 'The Taming of the Shrew' என்ற மேடை நாடகத்தின் மூலம் நடிப்புலகில் பிரவேசித்தவர் தான் பிரபல ஹாலிவுட் நடிகர் 'டாம் ஹாங்க்ஸ்'. ஹாம்லெட், போலி போன்ற பல மேடை நாடகங்களில் நடித்த இவர் 1980ம் ஆண்டு He Knows You're Alone என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்தார். தனது இயல்பான நடிப்பால் ஹாலிவுட் திரையுலகைக் கலக்கிய இவர் இதுவரை 6 முறை ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு முறை ஆஸ்கார் விருதையும் தட்டிச்சென்றுள்ளார். கோல்டன் க்ளோப் விருது எம்மி விருது என்று ஹாலிவுட் திரையில் வழங்கப்படும் அனைத்து முன்னணி விருதுகளையும் இவர் பல முறை பெற்றுள்ளார்.

Greyhound, BIOS, News of the World போன்ற படங்களில் நடித்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். ஆஸ்திரேலியா வந்த தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது தனது உடல்நிலை சிறந்த முறையில் தேறிவருவதாக கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு தானும் தனது மனைவியும் நலமாக உள்ளோம் என தெரிவித்துள்ளார். தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டது மிகவும் ஆரோக்கியமான ஒன்று என கருதுவதாக தெரிவித்துள்ள டாம், இதன் மூலம், கொரோனவை யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம் என்பதை உணர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுவும் கடந்து போகும் என்ற மந்திர சொல்லே கொரோனாவிற்கு தீர்வு என டாம் ஹாங்க்ஸ் தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்