முகப்புஹாலிவுட்

விண்வெளி சாகச படத்துக்காக டாம் க்ரூஸுடன் மீண்டும் இணையும் இயக்குநர்!

  | May 28, 2020 15:22 IST
Tom Crusie

டாம் குரூஸ், ரிஸ்க் எடுத்து மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளை டூப் இல்லாமல் தானாகவே செய்யக்கூடிய ஆக்‌ஷன் ஹீரோ ஆவார்.

ஹாலிவுட் நட்சத்திரம் டாம் க்ரூஸ் இயக்குநர் டக் லிமனுடன் மீண்டும் ஒன்றிணையவுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், டாம் க்ரூஸ் மற்றும் எலன் மஸ்கின் விமான நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்' ஆகியவை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா'வுடன் இணைந்து ஒரு திட்டத்தில் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து தரப்பிலிருந்தும் அறிவித்தனர். இது விண்வெளியில் படமாக்கப்படவுள்ள "முதல் கதை அம்சமான படம்" ஆகும். அதிரடி சாகச களத்தில் உருவாகவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

டக் லிமன் முன்பு டாம் க்ரூஸுடன் ‘அமெரிக்கன் மேட்' மற்றும் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ' ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதத் தொடங்கியுள்ளதாகவும், குரூஸுடன் இணைந்து அவரும் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் ஒரு அதிரடி சாகசமாக விவரிக்கப்படுவதால், படம் உண்மையான ஸ்பேஸ்எக்ஸ் கப்பலில் படமாக்கப்படவுள்ளது, அதற்காக ஒரு விண்வெளி விமானத்தைத் தாங்கக்கூடிய பயிற்சியும் கொடுக்கப்படவுள்ளது.

டாம் குரூஸ், ரிஸ்க் எடுத்து மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளை டூப் இல்லாமல் தானாகவே செய்யக்கூடிய ஆக்‌ஷன் ஹீரோ ஆவார். அதற்காக உலகம் முழுக்க அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

அவரது 'மிஷன் : இம்பாசிபிள் ஃபால்அவுட்' படத்தில் ஒரு கட்டிடத்திலிருந்து கூரையிலிருந்து இன்னொரு கட்டிடத்துகு தாவும்போது கணுக்காலை உடைத்துக் கொண்டார், மேலும் ஹெலிகாப்டரில் தொங்கி நடித்தார். 'மிஷன்: இம்பாசிபிள் ரோக் நேஷன்' படத்தில் ஜெட் விமானம் பறக்கும் போது அதன்  பக்கவாட்டில் தொங்கி நடித்தார். மேலும் 'மிஷன்: இம்பாசிபிள்: கோஸ்ட் புரோட்டோகால்' படத்திற்காக அவர் உலகிலேயே முக உயரமான கட்டிடமான பூர்ஜ் கலிஃபாவில் ஏறி, உச்சியில் தொங்கி நடித்தார். இது போன்று ரசிகர்களை வாயை பிளக்கவைக்கும் பல சாகச காட்சிகளில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், 1986 ஆம் ஆண்டின் ஹிட் திரைப்படமான 'டாப் கன்' படத்தின் தொடர்ச்சியான 'டாப் கன்: மேவரிக்' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் க்ரூஸ். இப்படம் வரும் டிசம்பர் 23 அன்று வெளியிடப்படவுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com