முகப்புஹாலிவுட்

தொடங்கியது டாம் குரூஸின் ‘Mission Impossible 7’ படப்பிடிப்பு.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்..

  | September 07, 2020 19:26 IST
Mission Impossible 7

இப்படம் நவம்பர் 19, 2021 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் ‘மிஷன்: இம்பாசிபிள் 8’ நவம்பர் 4, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வரவிருக்கும் படங்களில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிக்கும் ‘மிஷன்இம்பாசிபிள்7' திரைப்படமும் அடங்கும். கடந்த பிப்ரவரியில், வெனிஸில் பாப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது. இருப்பினும், இத்தாலியில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமாகிவிட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

பின்னர், ஜூலை மாதம், குரூஸுடன் ‘மிஷன்: இம்பாசிபிள் 7' குழுவினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கட்டாய ஒழுங்குமுறை இல்லாமல் படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இந்த அணி நார்வேயில் உள்ளது, இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரி வெளிப்படுத்தியபடி, படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

f9c8s6k8

இன்ஸ்டாகிராமில் ஒரு மூச்சடைக்கக்கூடிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குநர் மெக்குவாரி, அதில் ஒரு அடையாளம் தெரியாத மனிதர் ஒரு சாரக்கடையில் காணப்படுகிறார். அது நிச்சயம் டாம் குரூஸாகவே இருக்கமுடியும் என்பது புகைப்படத்தை பார்க்கும் அனைவரின் கருத்தாகவே உள்ளது. அவர் “ஆக்‌ஷன் #MI7 நால் 1” எனப் பதிவிட்டுள்ளார்.

Action... #MI7 Day 1

A post shared by Christopher McQuarrie (@christophermcquarrie) on

இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது டாம் குரூஸ் நிகழ்த்தவிருக்கும் உயர் ஆக்டேன் அதிரடி காட்சிகளை நாம் விரைவில்  எதிர்பார்க்கலாம் என உறுதியாகிறது.

‘மிஷன்: இம்பாசிபிள் 7' திரைப்படத்தில் விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபேக்கா பெர்குசன், வனேசா கிர்பி மற்றும் எசாய் மோரலெஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் நவம்பர் 19, 2021 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் ‘மிஷன்: இம்பாசிபிள் 8' நவம்பர் 4, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com