முகப்புஹாலிவுட்

டாம் குரூஸின் ‘TopGun’ உட்பட 2021க்கு தள்ளப்பட்ட 2 முக்கிய ஹாலிவுட் படங்கள்!

  | August 06, 2020 20:15 IST
Top Gun Maverick

1986-ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் ஹிட் ‘டாப் கன்' தொடர்ச்சியே தற்போது 34 ஆண்டுகள் கழித்து ‘டாப் கன்: மேவரிக்' என உருவாகியுள்ளது.

டாம் குரூஸின் ‘Top Gun' மற்றும் ஜான் கிராசின்ஸ்கி இயக்கிய ‘A Quiet Place' படத்தின் தொடர்ச்சிப் படங்களில் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த ‘A Quiet Place-2' திரைப்படம் 2021, ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும். அதே நேரத்தில் 1986 வெளியான கிளாசிக் திரைப்படத்தின் தொடர்ச்சியான 'TopGun: Maverick' திரைப்படம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இப்போது 2021, ஜூலை 2-ஆம் தேதிக்கு வெளியீட்டை மாற்றியுள்ளது.

நடிகர் டாம் குரூஸுக்கு உலகம் முழுவது கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஒவ்வோரு படத்தில் அவரது உண்மையான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் எல்லோரையும் கவர்ந்த ஒரு டாப் ஆக்‌ஷ்ன் ஹீரோவாக திகழ்கிறார். அவரது நடிப்பில் 1986-ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் ஹிட் திரைப்படம் ‘டாப் கன்'. அதன் தொடர்ச்சியே தற்போது 34 ஆண்டுகள் கழித்து ‘டாப் கன்: மேவரிக்' என உருவாகியுள்ளது. இப்படத்தை Joseph Kosinski இயக்கியுள்ளார்.

அதேபோல், 2018-ஆம் ஆண்டு வெளியான ‘A Quit Place' திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் அதன் தொடர்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை John Krasinski இயக்கியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com