முகப்புஹாலிவுட்

“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா

  | April 05, 2019 16:45 IST
Avengers End Game

துனுக்குகள்

  • இந்த படம் ஏப்ரல் 26ல் வெளியாகிறது
  • தமிழில் வெளியாகும் இந்த படத்திற்கு டப்பிங் செய்திருக்கிறார் விஜய்சேதுபதி
  • ஆண்ட்ரியா இந்த படத்திற்கு டப் செய்திருக்கிறார்
அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமாக “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ளது.  இதற்கு முன்னர் வெளியான அவெஞ்சர் 3 பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார்.
 
விழாவில் விஜய் சேதுபதி, ‘அவெஞ்சர்ஸ் படத்தில் எனக்கு அயன் மேன் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். இந்த திரைப் படத்திற்கான டப்பிங் பேசும் போது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன், பயந்தேன். பிறகு அதை கற்றுக் கொண்டேன்' என்று பேசியுள்ளார். மேலும் தமிழில் ஏன் சூப்பர் ஹீரோ கதைகள் வெளியாவதில்லை என்ற கேள்விக்கு, ‘நாம் எடுப்பது எல்லாமே சூப்பர் ஹீரோ படம்தான். இங்கு கதாநாயகன் அடித்தாலே சூப்பர் ஹீரோக்கள் அடிப்பது போல வில்லன்கள் பறக்கிறார்கள் என நகைச்சுவையாக விஜய் சேதுபதி பதிலளித்தார்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்