முகப்புஹாலிவுட்

இரண்டு புதிய போஸ்டர்களுடன் இணையத்தை கலக்கும் ‘டெனெட்’..!

  | July 02, 2020 22:25 IST
Tenet

TENET ஆரம்பத்தில் ஜூலை 17 வெளியீடாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இரண்டு முறை தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.

மெமெண்டோ, பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், டார்க் நைட் ரைஸஸ், இன்டெஸ்டெல்லார் போன்ற படங்களுக்காக உலக புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவரது அடுத்த படமாக ‘டெனெட்' வெளியாக தயாரகிவருகிறது.

இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் கடந்த மே 22-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் காலப் பயனத்தைக் குறித்தது அல்ல, ஆனால் காலத்தை பின்னோக்கி செயல்படுத்தும் அறிவியல் ரீதியான புதிய யோசனையுடன் இயக்குநர் நோலன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில், கால நேரத்தை கையாளும் சக்தி கொண்டவராக ஜான் டேவிட் வாஷிங்டன் நடித்துள்ளார். மேலும், மார்டின் டொனோவேன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, ஆரோன் டெய்லர்-ஜான்சன், கென்னத் பிரனாக், டிம்பிள் கபாடியா மற்றும் மைக்கேல் கைன் ஆகியோர் நடித்துள்ளனர்.

TENET ஆரம்பத்தில் ஜூலை 17 வெளியீடாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இரண்டு முறை தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்று எற்படுத்தியுள்ள இந்த இக்கட்டான  சூழ்நிலையால் படத்தின் வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருக்க, வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்காக இப்போது இந்த படத்திலிருந்து இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது Warner Bros India. தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com