முகப்புஹாலிவுட்

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தயாராகும் `பேட் பாய்ஸ்' பட மூன்றாம் பாகம்

  | February 01, 2018 20:31 IST
Will Smith

துனுக்குகள்

 • ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஆக்ஷன் காமெடி திரைப்படம் பேட் பாய்ஸ்
 • இதன் இரண்டு பாகங்களும் பெரிய ஹிட்
 • இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது
வில் ஸ்மித் மற்றும் மார்டீன் லாரன்ஸ் நடிப்பில் இரு பாகங்களாக மைகேல் பே இயக்கிய படம் `பேட் பாய்ஸ்'. ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரசிக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

2003ல் வெளியான `பேட் பாய்ஸ் 2' படத்துக்குப் பிறகு அடுத்த பாகம் தயாராகாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பல இயக்குநர்கள் கைகளுக்குச் சென்று வந்தது `பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்' படத்தின் ஸ்க்ரிப்ட். நடிகர்களின் தேதி பிரச்சனை, கதை என பல சிக்கல்களைத் தாண்டி இப்போது இரட்டை இயக்குநர்களான அடில் எல் அர்பி மற்றும் பிலால் ஃப்லாஹ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முந்தைய இரு பாகங்களிலும் அசத்திய வில் ஸ்மித் மற்றும் மார்டீன் லாரன்ஸ் பல வருடத்துக்குப் பிறகு மீண்டும் இணையவிருக்கும் `பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் ' ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறதாம்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com