முகப்புஹாலிவுட்

வரலாற்றில் இடம்பெற்ற அடிமையாக நடிக்கும் வில் ஸ்மித்.!! ‘Emancipation’

  | June 16, 2020 21:03 IST
Will Smith

‘கிங் ரிசார்டு’ என தலைப்பிடப்பட்டுள்ள ரிச்சர்ட் வில்லியம்ஸின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வில் ஸ்மித் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித், பிரபல அமெரிக்க இயக்குநர் Antoine Fuqua இயக்கும் ‘Emancipation' எனும் அடிமை த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.

வில்லியம் என். கோலேஜ் எழுதிய இந்த படம் ‘பீட்டர்' என்ற தப்பித்து ஓடிப்போன அடிமையின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவர் தனது சுதந்திரத்திற்காக இரக்கமற்ற வேட்டைக்காரர்களிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை பற்றிய கதை எனக் கூறப்படுகிறது.

2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தின் தயாரிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மித் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் COVID-19 தொற்றுநோயால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் வில் ஸ்மித், டென்னிஸ் சூப்பர் ஸ்டார்களான வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸின் தந்தையும் பயிற்சியாளருமான ரிச்சர்ட் வில்லியம்ஸின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘கிங் ரிசார்டு' என தலைப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் இயக்குநர் Fuqua ‘Infinity' என்ற அதிரடி திரில்லரில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் உள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com