முகப்புஹாலிவுட்

மீண்டும் ‘வொண்டர் வுமன் 1984’ ரிலீஸ் தேதியில் மாற்றம்.!

  | September 12, 2020 19:09 IST
Wonder Woman

‘TENET’ வெளியாகிவிட்டதால், இப்போது அறிவிக்கப்பட்ட தேதியில் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று ‘வண்டர் வுமன் 1984'. இப்படம் 2017-ஆம் ஆண்டு பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் கேல் கெடாட் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான DC சூப்பர் ஹீரோ படத்தின் தொடர்ச்சியாகும்.

00mi2v

இந்த திரைப்பட வெளியீடு ஏற்கெனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 2019ல் வெளியாகவேண்டிய  இப்படம் இந்த ஆண்டுக்கு (2020) ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் ஜூன் 5யிலிருந்து, ஆகஸ்ட் 14-க்கு ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, ‘வொண்டர் வுமன் 1984' அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது, ‘வொண்டர் பெண் 1984' டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிஸ்டபர் நோலனின் ‘TENET' ஏற்கனவே வெளியாகிவிட்டதால், இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட்ட தேதியில் நிச்சயம் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com