முகப்புகோலிவுட்

இந்த வாரம் வெளியாகும் எக்கச்சக்க தமிழ் படங்கள்..!

  | December 12, 2019 16:10 IST
Capmaari

துனுக்குகள்

 • ஜெய் நடிக்கும் கேப்மாரி திரைப்படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார்.
 • சுசீந்திரன் இயக்கும் சாம்பியன் படத்தில் நரேன் நடித்துள்ளார்.
 • பரத்தின் காளிதாஸ் திரைப்படத்தை ஸ்ரீ செந்தில் நாதன் இயக்கியுள்ளார்.
நாளை சாம்பியன், கருத்துக்களை பதிவு செய், காளிதாஸ், கேப்மாரி உள்ளிட்ட 11 தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது.
n1hns35o
M பிக்சர்ஸ் என்ற பட  நிறுவனம்  தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கருத்துக்களை பதிவு செய்'. இந்த படத்தில் பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர். ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள். இந்த படத்தை ‘ஜித்தன் 2', ‘1 A.M' ஆகிய படங்களை இயக்கிய  ராகுல் இயக்குகிறார்.  கதை திரைக்கதை வசனத்தை ராஜசேகர் எழுதியுள்ளார்.
k75k9neo
ஸ்ரீ செந்தில் நாதன் இயக்கத்தில் பரத் நிவாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘காளிதாஸ்'. இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். மேலும், சுரேஷ் சந்திர மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லரான இத்திரைப்படத்திற்கு குற்றம் 23, ரங்கூன், கீ சிம்பா உள்ளட்ட படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் பழைய ஜோக் தங்கதுரை நடித்துள்ளார்.
jive1shg
சுசீந்திரன் இயக்கும் ‘சாம்பியன்' திரைப்படத்தில் விஷ்வா மற்றும் மிருணாளினி நாயகன்-நாயகியாக அறிமுகமாகின்றனர். இப்படத்தில் முக்கிய வேடங்களில் மனோஜ் பாரதிராஜா மற்றும் நரேன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவும், தியாகு படத்தொகுப்பும் செய்துள்ளனர். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அரோல் கொரலி இசையமைத்துள்ளார்.
hi3eqnqg
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” . இப்படத்தில் ஜெஇ கதாநாயகனாக நடிக்கிறார். ஜெய்-யின் 25-வது படமான இப்படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சித்தார்த் விபின் இசை அமைக்க ஜீவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த 4 படங்களுடன் திருப்பதிசாமி குடும்பம், சென்னை டூ பாங்காக், கைலா,  50 ரூவா, தேடு, மங்குனி பண்டியர்கள் மற்றும் மெரினா புரட்சி ஆகிய 11 திரைப்படங்கள் வெளியாகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com