முகப்புகோலிவுட்

'நம் இதயமும் இரண்டாகப் பிளந்தது' - வருத்தம் தெரிவித்த இயக்குநர் பார்த்திபன்..!

  | August 08, 2020 07:29 IST
Kerala Flight Accident

துனுக்குகள்

 • துபாயிலிருந்து கேரளாவுக்கு 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
 • இந்த நிகழ்வு குறித்து பிரபல நடிகர் பார்த்திபன் வெளியிட்ட ட்விட்டர்
 • விமானத்தைப் போன்றே நம் இதயமும் இரண்டாகப் பிளந்தது
துபாயிலிருந்து கேரளாவுக்கு 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ரன்வே பகுதியிலிருந்து வழக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது. கோழிக்கோடு விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் விமானம் தரையிறங்கியுள்ளது. IX 1344 என்ற எண் கொண்ட அந்த விமானத்தின் இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 15 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது. 

விமானம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 50 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க செயல்படுத்தப்பட்டுள்ள 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் இந்த விமானம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பிரபல நடிகர் பார்த்திபன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "கேரள கோழிக்கோடு விமான விபத்து விமானத்தைப் போன்றே நம் இதயமும் இரண்டாகப் பிளந்தது.உயிர் நீத்தவர்களின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதலைத் தவிர வேறென்ன சொல்லி நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள முடியும்? விபத்துகள்... போதிய கவனத்தால் தவிர்க்கப் படவேண்டும்!!!" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் விவேக் இசையமைப்பாளர் ரகுமான், நடிகை நயன்தாரா ஆகியோரும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல்களை தெரிவித்துள்ளனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com