முகப்புகோலிவுட்

"துள்ளுவதோ இளமை" படத்தின் 17ம் ஆண்டு நிறைவு; ரசிகர்களுக்கு தனுஷ் எழுதிய அன்பு மடல்..?

  | May 10, 2019 19:12 IST
Dhanush

துனுக்குகள்

  • துள்ளுவதோ இளமைப் படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • இப்படம் கடந்த 2002ம் ஆம் ஆண்டு வெளியானது
கடந்த 2002ம் ஆண்டு மே 10ம் நாள் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் தனுஷ்.
 
இப்படம் வெளியாகி இன்றுடன் சரியாக 17 ஆண்டுகள் முடிகிறது. தமிழ் சினிமாவில் குறுகிய நாட்களில் உச்சத்தை அடைந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்றால் அது மிகையல்ல.
 
2vdaoa6

 
விஜய், அஜித், விக்ரம், சூர்யா, என முன்னணி நடிகர்கள் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அமைதியாக நுழைந்தார் இவர். படிப்படியாக இவருக்கு கிடைத்த அடுத்தடுத்த படங்களிலே 90களில் பிறந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
 
0t1j7akg

 
கதாநாயகன் என்றாலே கட்டுமஸ்தான உடம்பு வைத்திருப்பார் என்கிற பிம்பம் பெருவாரியான ரசிகர்களை ஆட்கொண்டிருந்த நிலையில் ஒல்லியான உடம்பு, இயல்பான தோற்றம், எதார்த்தமான நடிப்பால்  இளைஞர்களின் நாயகனாக உருவெடுத்தார் தனுஷ்.
 
lua1u0dg

 
இவரின் முதல் படம் 'துள்ளுவதோ இளமை' விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அத்தனைப்பாடல்களும் இன்றைக்கும் இளைஞர்கள் முனுமுனுக்கும் அளவிற்கு நினைவுகளில் இடம் பிடித்திருக்கிறது. இப்படத்தின் ஆழமான வெற்றிக்கு காரணம் இந்த படத்தின் இசை என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
 
ubuoieco


இந்த படம் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படத்தின் 17ம் ஆண்டின் நிறைவு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
sfikfkh8

 
"துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகி விட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. எதுவும் தெரியாத சின்ன பையனாக இருந்த எனக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்து, நடிகனாகக்கூட முடியாது என்று நினைத்த என்னை ஒரு ஸ்டாராக மாற்றி இருக்கிறீர்கள், எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.
 
thjdbbmg

 
என்னுடைய வெற்றி தோல்வி எல்லாவற்றிலும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். நான்  சரியான மனிதன் கிடையாது ஆனால் உங்களுடைய அளவுகடந்த அன்பு, என்னை பன்படுத்தி வளர்த்திருக்கிறது.
 
fn72ogj8


உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள், இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை ரசிகர்களாகிய நீங்கள் வெளியிட்டிருந்த போஸ்டர்களை பார்த்து நான் இன்னும் ஊக்கம் அடைந்திருக்கிறேன். இந்த அன்பு எப்போதும் வேண்டும், அன்பை பரவச் செய்யுங்கள் அன்பு மட்டும் உலகத்தை உருவாக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்