முகப்புகோலிவுட்

'ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் கொரோனா..?' - 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்..!!

  | May 26, 2020 14:21 IST
Raghava Lawrence

துனுக்குகள்

 • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா
 • பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் இருக்கும் சில
 • அனைவரும் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக தகவல்கள்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 549 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். புதிய பாதிப்புகளின் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நேற்று மட்டும் 407 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8,731 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் இருக்கும் சில குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையால் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது, லாரன்ஸ் அறக்கட்டளையில் உள்ள 18 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மருத்துவ முகாமிற்க்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நல்வாய்ப்பாக குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com