முகப்புகோலிவுட்

'28ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தல' - தளபதி ரசிகர்கள் வெளியிட்ட மாஸ் Tribute..!

  | August 02, 2020 19:24 IST
Vignesh Shivan

துனுக்குகள்

 • அந்த புகழ் என்ற கதவுகளை பல ஆண்டுக்கால முயற்சியால் முட்டித்திறந்த
 • இந்நிலையில் அஜித் என்ற இந்த மாபெரும் நடிகர் திரையுலகில் கால்பதித்து 28
 • அதை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.
தன்னை முழுமையாய் நேசிக்காத எவரையும் தமிழ் சினிமா புகழ் என்ற உச்சத்தை தொட அனுமதித்ததில்லை என்பது பலரின் கருத்து. அந்த புகழ் என்ற கதவுகளை பல ஆண்டுக்கால முயற்சியால் முட்டித்திறந்த நடிகர்கள் பலர். மக்கள் திலகம் தொடங்கி மக்கள் செல்வன் வரை அதற்கு சான்றாக இந்த திரையுலகில் வலம்வருவோர் பலர். அந்த வகையில் 1990ம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றி, அதன் பிறகு காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக இறுதியில் தலையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் அஜித் என்ற தனி மனிதன்.  

காதல் கோட்டை, ஆசை, கல்லூரி வாசல் போன்ற படங்கள் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும் இன்றளவும் அவர் நடிப்பும் அந்த படங்களும் பசுமையாய் வளம்வருகின்றன. அன்று தொடங்கி இன்று வரை பல பரிமாணங்கள் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இந்த ஈடுஇணையற்ற நாயகன். 

இந்நிலையில் அஜித் என்ற இந்த மாபெரும் நடிகர் திரையுலகில் கால்பதித்து 28 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதை பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் இணைய வாயிலாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்களும் தல அஜித் குறித்து ஒரு மிரட்டலான காணொளியை உருவாக்க அதை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். மேலும் பல பிரபலங்கள் Common Dpயை வெளியிட்டு வருகின்றனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com