முகப்புகோலிவுட்

"மூன்று ஆண்டுகள் நிறைவுற்றது" - ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் 'புரியாத புதிர்'..!

  | September 01, 2020 12:37 IST
Ranjith Jeyakodi

துனுக்குகள்

  • கடந்த ஆண்டு (2017) வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழ்
  • தற்போது பிரபல நடிகை பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும்
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய முதல் படமான மக்கள் செல்வன்
கடந்த ஆண்டு (2017) வெளியான ‘புரியாத புதிர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காயத்ரி டூயட் பாடி ஆடியிருந்தார். 2017ம் ஆண்டு தான மக்கள் செல்வனுக்கு விக்ரம் வேதா, கவண், கதாநாயகன் மற்றும் கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பிறகு ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான படம் தான் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படம். 

தற்போது பிரபல நடிகை பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும் யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தினை இயக்கி வருகிறார் ரஞ்சித் ஜெயக்கொடி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்த படத்திற்கான தனது டப்பிங் பணிகளை பிந்து மாதவி நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செப்டம்பர் 1ம் தேதி ஒரு சிறப்பான நாள், அதனை நினைவுகூர்ந்துள்ளார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய முதல் படமான மக்கள் செல்வன் நடிப்பில் வெளியான புரியாத புதிர் என்ற படத்தை தற்போது நினைவுகூர்ந்துள்ளார் அவர். மேலும் இந்த படத்தின் நாயகனும் இந்த படத்தை நினைவுகூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com