முகப்புகோலிவுட்

"அவசரப்பட்டுவிட்டான் வாழ்வில்" - நா. முத்துக்குமாரை நினைவுகூரும் சேரன்..!

  | August 14, 2020 11:37 IST
Cheran Tweet

துனுக்குகள்

 • நா. முத்துக்குமார், தமிழ் சினிமா இழந்துவிட்ட ஒரு நிகரற்ற எழுத்தாளர்
 • 2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் திரைப்படத்தில்
 • அன்புத்தம்பி... தமிழ்த்தொண்டு செய்து கவிதையால் அந்நிய மொழிக்காரன்
நா. முத்துக்குமார், தமிழ் சினிமா இழந்துவிட்ட ஒரு நிகரற்ற எழுத்தாளர் அவர். காஞ்சிபுரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த முத்துக்குமார் சிறு வயதில் தாயை இழந்தார். எழுத்தின் மீது கொண்ட காதலால் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான திரு. பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். சத்யராஜ் அவர்களின் நடிப்பில் வெளியான மலபார் போலீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு பாடலாசிரியராக அறிமுகமானார். 

உன் பேர் சொல்ல ஆசை தான், எங்கள் வீட்டில் எல்லா நாலும் கார்த்திகை தொடங்கி எந்திரன் 2.0 படத்தில் ரம்யமாய் ஒலித்த புல்லினங்காள் என்ற பாடல் வரை 200கும் அதிகமான பாடல்களை அவர் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் திரைப்படத்தில் வெளியான" ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற பாடலின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.     

2014ம் ஆண்டு சைவம் என்ற படத்தில் வந்த "அழகே, அழகே" என்ற பாடலுக்கும் இவர் தேசிய விருது பெற்றார். மஞ்சள் காமாலை நோயினால் பல நாட்கள் அவதிப்பட்டு வந்த முத்துக்குமார் மாரடைப்பு காரணமாக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அவரது 4ம் ஆண்டு நினைவுதினம் அனுரசிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளில் பிரபல நடிகர் சேரன் முத்துக்குமாரை நினைவுகூர்ந்துள்ளார். 
அவர் வெளியிட்ட பதிவில் "அன்புத்தம்பி...  தமிழ்த்தொண்டு செய்து கவிதையால் அந்நிய மொழிக்காரன் மேடையிலே அற்புத சாதனைகளை குவிக்க வேண்டியவன்...  அவசரப்பட்டுவிட்டான் வாழ்வில்.. விருதுக்கும் பணத்துக்கும் மயங்காதவன் எதற்காக விதிக்கு மயங்கினான் என தெரியவில்லை..  வாழட்டும் அவன் புகழ்..." என்று குறிப்பிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com