முகப்புகோலிவுட்

'பிரபாஸ் நடிப்பில் ராதேஷியாம்' - 24 மணி நேரத்தில் First Look படைத்த சாதனை..!!

  | July 13, 2020 10:27 IST
Radhe Shayam Poster

துனுக்குகள்

 • டோலிவுட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகராக இருந்தாலும்
 • ஒரு காதல் கதை என்று கூறப்படும் இப்படத்தில், பிரபாஸ் ஒரு அதிர்ஷ்டசாலியின்
 • 24 மணி நேரத்தில் சுமார் 6 மில்லியன் டீவீட்கள் பெற்று சாதனை படைத்துள்ளது
டோலிவுட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகராக இருந்தாலும், எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் ‘பாகுபலி' எனும் ஒரு படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்று, உலகளவில் பிரபலமான நடிகர் தான் பிரபாஸ். பிரபாஸ் கடைசியாக அதிரடி திரில்லர் படமான ‘சாஹோ' எனும் பான் இந்தியா திரைப்படத்தில் நடித்தார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் இப்படம் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்காலிகமாக ‘பிரபாஸ் 20' என்ற தலைப்பிடப்பட்டுள்ள அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, முரளி சர்மா, சச்சின் கெடேகர், பிரியதர்ஷி, சாஷா சேத்ரி, குணால் ராய் கபூர் மற்றும் சத்யன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தை பூஷன் குமாரின் டி-சீரிஸ் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸின் வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஒரு காதல் கதை என்று கூறப்படும் இப்படத்தில், பிரபாஸ் ஒரு அதிர்ஷ்டசாலியின் கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முன்பே அறிவித்தது போல தற்போது 'பிரபாஸ் 20' ராதேஷ்யாம் என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் first லுக் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. First லுக் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 6 மில்லியன் டீவீட்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com