முகப்புகோலிவுட்

வரலாறு கொடுத்த பரிசு ‘உலகநாயகன்’ ! சினிமா துறையில் 60ம் ஆண்டை தொடங்கும் கமல்!

  | August 12, 2019 18:33 IST
Kamal

துனுக்குகள்

  • களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமலின் பயணம் 60ம் ஆண்டை எட்டியிருக்கிறது
  • இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது
  • கமலுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த ஆளுமையாக இன்று வரை தனக்கென தனி அடையாளம் பதித்திருப்பவர் நடிகர் கமல் ஹாசன்.  நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பு என பன்முகத்தன்மையோடு இயங்கி வரும் கமல். இன்றுடன் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 59 ஆண்டுகள் நிறைவு ஆகிறது. 60தாவது ஆண்டை வெற்றியோடு எடுத்து வைத்து வீறுநடை போட்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘இந்தியன் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சங்கர் இயக்க இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரியா பவாணி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
 
கடந்த ஜனவரி மாதமே இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. குறிப்பாக கமல் தொடர்ந்து அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதும் படம் தாமதமாவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. சினிமா வாழ்க்கை பயணத்தில் 60 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கமல் தற்போது இப்படத்தில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அதன் படி சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது படக்குழு. இதனை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு கூறியிருக்கிறார். அதில், தன்னுடைய கேரவனில் அமர்ந்துகொண்டு எடுத்த போட்டோ ஒன்றை பதிவிட்டு இந்தியன் 2 பிகைன்ஸ் என்று பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் இந்தியன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இப்படம் கமலின் சினிமா வாழ்க்கையில் உருவாகும் முக்கியப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் திரைத்துறையினர்.
 
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமலின் நடிப்புப்பயணம் ஒரு பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி தன் அடுத்த வரலாற்றை பதிவு செய்ய இன்னும் வீரியமாக புறப்பட்டிருக்கிறது. அவரின் ஆகச்சிறந்த நடிப்பு உலக நாயகன் என்கிற பெரும் அந்தஸ்த்தை அவருக்கு அளித்திருக்கிறது வரலாறு. இன்னும் அவர் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்வோம்!
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்