முகப்புகோலிவுட்

சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு குறித்து கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

  | August 10, 2019 15:15 IST
Keerthy Suresh

துனுக்குகள்

 • நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்கை வரலாறு படம் இது
 • சிறநத நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார்
 • விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார் இவர்
ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்கு தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். அதன் படி 2018-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பட்டியல்  மத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான “நடிகையர் திலகம்' திரைப்படத்தின் தெலுக்கு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக பேசியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்,
 
“இப்படத்திற்காக தேசிய விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. என்னால் சாவித்திரி கேரக்டரில் சரியாக நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. மேலும், அந்த கேரக்டரில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததே இந்த விருதை பெற காரணமாக இருந்தது. இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.
 
இந்த தேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளேன் என்று நம்புவதாகவும், இனி அடுத்தடுத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com