முகப்புகோலிவுட்

66 வது தேசிய திரைப்பட விருதுவிழா! தமிழில் தேசிய விருதை கைப்பற்றி 'பாரம்' திரைப்படம்

  | August 09, 2019 19:38 IST
Bharam

துனுக்குகள்

 • தமிழில் பாரம் படம் தேசிய விருதை பெற்றது
 • கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான மகாநடி படம் விருது பெற்றது
 • பிரியா கிருஷ்ணசாமி பாரம் படத்தை இயக்கி இருக்கிறார்
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது.
 
விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். இன்று வெளியிடப்பட்ட விருது வென்றவர்கள் அறிவிப்பில், உத்தரகாண்ட் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.
 
‘பாரம்' என்ற தமிழ்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.மேலும் மலையளத்தில் ‘சூடானி ஃபிரம் நைஜீரியா', தெலுங்கில் ‘மஹாநடி' ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றுள்ளன.
 
தமிழில் தேசிய விருதை பெற்றுள்ள ‘பாரம்' திரைப்படத்தை பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விருதுகளுக்கு கே.ஜி.எஃப் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அன்பறிவ் என்ற இரட்டையர்கள் கே.ஜி.எஃப் படத்தில் சண்டை காட்சியை வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com