முகப்புகோலிவுட்

"அரசு கருத்தில் எடுக்கவேண்டும்" - கோரிக்கை விடுக்கும் இயக்குநர் சேரன்..!

  | August 07, 2020 08:29 IST
Cheran

துனுக்குகள்

 • உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில்
 • மேலும், ”தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக
 • நடிகர் சேரன் "அரசு இதை கருத்தில் எடுக்க வேண்டும்" என்று கூறி கோரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சில தினங்களுக்கு முன்பு, சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டது. துறைமுகத்திற்கு அருகிலிருந்த கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என அந்நாட்டு பிரதமர் பிரதமர் ஹசன் டயப் தெரிவித்துள்ளார்.

மேலும், ”தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஏற்றுமதி செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.” என செய்தியாளர் சந்திப்பில் டயப் கூறியுள்ளார். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் மருத்துவர் ராமதாஸ், “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 

தற்போது இந்த செய்தி அறிந்த பலரும் உடனடியாக இது குறித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். திரு. ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட கருத்தை மேற்கோள்கட்டி பேசியுள்ள நடிகர் சேரன் "அரசு இதை கருத்தில் எடுக்க வேண்டும்" என்று கூறி கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர்கள் பலரும் இந்த நிகழ்வு குறித்து தங்களது கருத்துக்கைளை தெரிவித்து வருகின்றனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com