முகப்புகோலிவுட்

'நயனின் மூக்குத்தியம்மன்' - படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம் ?

  | February 07, 2020 16:38 IST
Rj Balaji About Nayanthara

இந்த மூக்குத்தியம்மன் படத்தின் கதை முழுதும் நயன்தாராவை சார்ந்தே பயணிக்கின்றது

துனுக்குகள்

  • ‘எல்.கே.ஜி’ படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • பிரபல நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்
  • படத்தின் கதை முழுதும் நயன்தாராவை சார்ந்தே பயணிக்கின்றது
பிரபல பண்பலை தொகுப்பாளரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி அவர்கள் எழுதி நடித்த ‘எல்.கே.ஜி' படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் மீண்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்து புதிய கதை ஒன்றை எழுதியுள்ளார். 

‘மூக்குத்தி அம்மன்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த மூக்குத்தியம்மன் படத்தின் கதை முழுதும் நயன்தாராவை சார்ந்தே பயணிக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் ஒப்பந்தமியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இருட்டு அறையில் முரட்டு குத்து, சாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்தது அனைவரும் அறிந்ததே. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மூக்குத்தியம்மன் படப்பிடிப்பு தளத்தில், ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகர் கெளதம் கார்த்திக்குடன் எடுத்த புகைப்படத்தை தற்போது யாஷிகா வெளியிட்டுள்ளார்.   
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்