முகப்புகோலிவுட்

'இது போனஸ் Surprise' - கோப்ரா படக்குழு வெளியிட்ட அனிமேஷன் வீடியோ..!!

  | June 30, 2020 08:46 IST
Thumbi Thullal

துனுக்குகள்

 • டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய்
 • ‘தும்பி துள்ளல்' பாடலை விவேக் மற்றும் ஜிதின் ராஜ் எழுதியுள்ளனர்
 • ரசிகர்களுக்கு போனஸ் சந்தோஷமாக இந்த பாடலின் அனிமேஷன் வடிவத்தையும்
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘சியான்' விக்ரம்' நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா'. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF பட நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘இசைப்புயல்' ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

சியான் விக்ரம் 7 மாறுபட்ட வேடங்களில் தோற்றமளிக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி செம வைரலானது. சமீபகாலமாக, இப்படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு ஏமாற்றதில் இருந்த ரசிகர்களுக்கு, பெரும் வரமாக தற்போது ஏ.ஆர். ரகுமான் இசையில், ஸ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அபியங்கர் இணைந்து பாடியுள்ள இனிமையான ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது. கோப்ராவின் முதல் சிங்கிளான இந்த ‘தும்பி துள்ளல்' பாடலை விவேக் மற்றும் ஜிதின் ராஜ் எழுதியுள்ளனர். இப்பாடல் தற்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

அதே சமயம் இந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில் ரசிகர்களுக்கு போனஸ் சந்தோஷமாக இந்த பாடலின் அனிமேஷன் வடிவத்தையும் அந்த படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. seven screen studios நிறுவனம் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com