முகப்புகோலிவுட்

'கல்யாண பரிசு' - நடிகர் நித்தினுக்கு Surprise கொடுக்க இருக்கும் RangDe படக்குழு..!

  | July 26, 2020 10:37 IST
Nithiin

துனுக்குகள்

  • இளம் டோலிவுட் ஹீரோ நித்தின் கடந்த புதன்கிழமை காலை அவரது 8 ஆண்டு கால
  • இந்நிலையில் தற்போது நித்தின் அவர்கள் கீர்த்தி சுரேஷ் அவர்களுடன் நடித்து
  • மேலும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இன்று மாலை
இளம் டோலிவுட் ஹீரோ நித்தின் கடந்த புதன்கிழமை காலை அவரது 8 ஆண்டு கால காதலி ஷாலினியுடன் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதமே திட்டமிடப்பட்ட இந்த திருமணம் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக் டவுன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை அன்று நித்தினும் அவரது காதலி ஷாலினியும் வரும் ஜூலை 26ம் தேதி இரவு 8.30 மணிக்கு (இன்று) ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நித்தின் அவர்கள் கீர்த்தி சுரேஷ் அவர்களுடன் நடித்து வெளியாக இருக்கும் 'RangDe' திரைப்பட குழுவினர் அவருக்கு திருமண பரிசு ஒன்றை தர முடிவு செய்துள்ளனர். இன்று மாலை அந்த பரிசை வெளியிட இருப்பதாகவும் அந்த படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் வெங்கி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்த கொரோனா காலகட்டத்திலும் கூட சற்றும் சிரமம் பார்க்காமல் தனது திருமண சடங்குகளுக்கு மத்தியிலும் படத்திற்காக நேரம் ஒதுக்கி அவர் டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்தார். மேலும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இன்று மாலை ஒரு surprise ஒன்றை வெளியிட உள்ளதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com