முகப்புகோலிவுட்

'இனிய நட்பு தின வாழ்த்துக்கள்' - Friendship பட 'Glimpse' வெளியிடும் ராணா..!

  | July 30, 2020 13:28 IST
Friendship

துனுக்குகள்

  • சில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் அவ்வப்போது வலம்வருவதும்
  • ஏற்கனவே இந்த படம் குறித்த பல சுவாரசிய அப்டேட்கள் வெளிவந்து
  • நடிகர் ராணா தகுபதி வெளியிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து அரசியல் மற்றும் சினிமா ஆகிய துறைகளுக்கு சென்றவர்கள் சிலர். பாகிஸ்தானின் தற்போதைய பிரதமராக இருப்பது ஒரு மிக சிறந்து கிரிக்கெட் வீரர் என்பது நாம் அறிந்ததே. அதே போல சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் அவ்வப்போது வலம்வருவதும் உண்டு. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பஜ்ஜி என்று அனைவரும் செல்லமாக அழைக்கும் ஹர்பஜன் சிங் அவர்களும் தற்போது திரையுலகில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். 

அண்மைக்காலமாக தமிழ் மொழியில் ட்வீட் போட்டு அசத்தும் ஹர்பஜன் Friendship என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவுடன் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் சதிஷ் அவருக்கு நண்பராக நடித்துள்ளார் என்பது சிறப்பம்சம். இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். 

ஏற்கனவே இந்த படம் குறித்த பல சுவாரசிய அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று உலக முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் Friendship படம் குறித்த ஒரு சிறிய GLIMPSE இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த Glimpse காட்சியை பிரபல நடிகர் ராணா தகுபதி வெளியிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com