முகப்புகோலிவுட்

எம்.ஜி.ஆர். பட தலைப்பை கொடுக்கமுடியாது! தனுஷ் படத்திற்கு நெருக்கடி?

  | September 11, 2019 13:03 IST
Dhanush

துனுக்குகள்

  • லண்டனில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது
  • இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கிறார்
  • ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்
வெற்றிமாறனின் அசுரன் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து அடுத்த மாதம் 4ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படம் லண்டனில் படமாக்கப்பட்டு வருகிறது.
 
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்' என்ற பெயர் வைக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.  இது தொடர்பாக படக்குழு இப்போதுதான் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறோம் தலைப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தனர்.
 
எம்.ஜி.ஆர், லதா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973-ல் வெளியானது. எம்.ஜி.ஆர் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமை இதற்கு உண்டு. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை தலைப்பு வைப்பதற்கு முன்ன எங்க வீட்டு பிள்ளை என்ற தலைப்பையே வைக்க விரும்பியது படக்குழு ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தலைப்பு மாற்றப்பட்டது. தற்போது உலகம் சுற்றும் வாலிபன் தலைப்பை பயன்படுத்தவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
 
இதுகுறித்து தயாரிப்பாளர் சாய் நாகராஜன் கூறும்போது, “எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வருகிறோம். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் உரிமை என்னிடம் இருக்கிறது. எனவே தலைப்பை யாருக்கும் கொடுக்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் தலைப்பு குறித்து எவ்வித கருத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்