முகப்புகோலிவுட்

'ஊரடங்கில் டான்ஸ் Mash up' - அழகிய நடனத்தில் அசத்தும் சாந்தனு, கீக்கி மற்றும் cousins..!!

  | July 06, 2020 11:22 IST
Shanthanu And Kiki

துனுக்குகள்

 • கடந்த 2015ம் ஆண்டு தனது காதலியும் பிரபல தொகுப்பாளினியுமான கீக்கியை
 • தாய் மற்றும் தந்தையுடன் பேட்டி கண்டு வீடியோ வெளியிட்ட நிலையில்
 • உறவினர்களுடன் ஜாலியாக ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
1998ம் ஆண்டு வெளியான பாக்கியராஜின் வெட்டிய மடிச்சுக்கட்டு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகக் களமிறங்கிய நடிகர் தான் சாந்தனு. 10 ஆண்டுகள் கழித்து 2008ம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான Film Fare South விருதினை பெற்றார். 2017ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்காத சாந்தனு இந்த ஆண்டு விஜயின் மாஸ்டர் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகின்றார். 

இவர் கடந்த 2015ம் ஆண்டு தனது காதலியும் பிரபல தொகுப்பாளினியுமான கீக்கியை திருமண செய்துகொண்டார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இந்த ஜோடி தற்போது நிலவும் இந்த ஊரடங்கு நேரத்தில் ட்விட்டர், இன்ஸ்டா மட்டும் இன்றி தங்களது youtube சேனலில் பல காணொளிகளை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். 

ஏற்கனவே தாய் மற்றும் தந்தையுடன் பேட்டி கண்டு வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது உறவினர்களுடன் ஜாலியாக ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த quarantine mash up இப்பொது வைரலாகி வருகின்றது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com