முகப்புகோலிவுட்

ஒரே ஒரு ஸ்மைலி ட்வீட்: Mr.லோக்கலை கலாய்கிறாரா அருண் விஜய்? கொந்தளிக்கும் எஸ்.கே ரசிகர்கள்!

  | May 18, 2019 14:39 IST
Arun Vijay Tweets

சிவகார்த்திகேயனை கலாய்க்க தான் இந்த ஸ்மைலியை ட்வீட்டியிருக்காரா அருண் விஜய்?!

இயக்குனர் ராஜேஷ் இயக்கி சிவகார்த்திகேயன் நடிச்சு வெளியாகியிருக்க ஒரு திரைப்படம் 'Mr.லோக்கல்'. இந்த திரைப்படம் கடந்த மே 17-ஆம் தேதி திரைக்கு வந்துச்சு. இந்த படத்துல சிவகார்த்திகேயன் கூட அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிச்சிருந்தாங்க. மேலும் சதீஷ், ரோபோ சங்கர், ஆர் ஜே பாலாஜி என பல காமெடி கதாப்பாத்திரங்களும் இந்த படத்துல இடம்பெற்றிருந்தாங்க. 
 
74d80fq


ராஜேஷ் இயக்கியிருக்காரு, சிவகார்த்திகேயன் மட்டுமில்லாம சதீஷ், ரோபோ சங்கர், ஆர் ஜே பாலாஜி என ஒரு பெரிய காமெடி படையே இந்த படத்துல நடிச்சிருக்காங்க, அதனால இந்த படம், ஒரு பெரிய காமெடி படமா வெளியாகும்னு ரசிகர்கள் பலமா எதிர்பார்த்தாங்க. ஆன அப்படி எதிர்பார்த்த எல்லாருக்கும் கிடச்சது என்னமோ ஒரு பெரிய ஏமாற்றம் தான். என்னதான் இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிடிச்ச படமா வந்திருந்தாலும், நல்ல காமடி படமா இருக்கும்னு எதிர்பார்த்த இந்த படம், கொஞ்சம் ஏமாற்றம் தரும் படமாவே இருந்துச்சு-னு பல சினிமா ரசிகர்கள் கருத்துகளை முன்வைக்கிறாங்க. மேலும், பல சினிமா விமர்சகர்களும் இந்த படத்தை கடுமையா விமர்சிச்சிருந்தாங்க.

இந்த படம் வெளியான நேத்து, அருண் விஜய் அவரோட ட்விட்டர் பக்கத்துல ஒரே ஒரு ஸ்மைலியோட ஒரு பதிவை போட்டிருந்தார். இந்த பதிவை பார்த்துட்டு எல்லாரும், அருண் விஜய் மிஸ்டர் லோக்கல் படத்தை தான் கலாய்க்கிறார்னு சொல்லிட்டு இருக்காங்க. இதற்கு இடையில, ஏற்கனவே, படம் நல்லா இல்லைனு கடுப்புல இருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், இந்த பதிவை பார்த்துட்டு, அருண் விஜயை திருப்பி கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ, இவரு அவர கலாய்க்க, அதுக்கு அவர் ரசிகர்கள் திரும்ப இவர கலாய்க்கனு ட்விட்டர்ல ஒரே ட்ரெண்டிங்-ஆ போய்ட்டு இருக்கு இந்த பதிவு.
 
ரசிகர்கள் பலரின் 3 மணி நேர கொந்தளிப்புக்கு அப்புறம், இந்த பதிவுக்கான விளக்கத்தை மற்றொரு ட்வீட்டா ட்வீட்டியிருக்கார். அதுபடி,"என்னோட அடுத்த படத்தோட அறிவிப்பு அடுத்த வாரம் வர இருக்கு, முந்தைய ட்வீட்டும் அது சமந்தப்பட்டதுதான், யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. நான் என் வேலையில் மட்டும்தான் கவனம் செலுத்தி இருப்பேன்" அப்படினு சொல்லியிருக்காரு அருண் விஜய். அதனால, சிவகார்த்திகேயன் ரசிகர்களே, அருண் விஜய் சிவகார்த்திகேயன் கலாய்க்க அந்த பதிவை போடல,  யாரும் அவர தப்பா எடுத்துக்காதீங்க!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்