முகப்புகோலிவுட்

'பார்த்திபனின் ஒத்த செருப்பு Size 7"..!!' - வியந்து பாராட்டிய அரசியல் பிரபலம்

  | May 28, 2020 14:40 IST
Oththa Seruppu Movie

துனுக்குகள்

 • பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து, விநியோகஸ்தராக பணியாற்றி
 • ஆரம்பகாலம் தொட்டே தனது படங்களில் கதைக்களம் வழியாக புதுமையை புகட்டும்
 • பிரபல அரசியல் தலைவர் கார்த்திக் சிதம்பரம் இந்த படத்தை இணையத்தில்
பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து, விநியோகஸ்தராக பணியாற்றி  வெளிவந்த படம் தான் ‘ஒத்த செருப்பு' இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நடிகர் படம் முழுக்க நடித்து இயக்கி, தயாரித்துள்ள படம் 'ஒத்த செருப்பு' என்கிற பெருமையை இப்படம்  பெற்றுள்ளது. பல்வேறு விருது போட்டியிலும் இப்படம் விருதுகளை கைப்பற்றியுள்ளது. இந்த படத்தை பலரும் பாராட்டி வருகிறார். 

ஆரம்பக்காலம் தொட்டே தனது படங்களில் கதைக்களம் வழியாக புதுமையை புகட்டும் பார்த்திபன் அண்மைக்காலமாக தொழில்நுட்ப ரீதியாகும் புதுமையை புகுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்று ஏற்கனவே வெளியான 'Single Actor Movie-யும்' அடுத்து தயாராகி வரும் Single Shot Movie-யும் தான் என்றால் அது மிகையல்ல. 

இந்நிலையில் ஒத்தசெருப்பு படத்திற்கு இன்று வரையிலும் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் பிரபல அரசியல் தலைவர் கார்த்திக் சிதம்பரம் இந்த படத்தை இணையத்தில் பார்த்து தனது பாராட்டுக்களை தற்போது தெரிவித்துள்ளார். நடிகர் பார்த்திபனும் அவர் பணியில் நன்றி தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com