முகப்புகோலிவுட்

எப்படி படமாக்கப்பட்டது அவெஞ்சர்ஸ்; வீடியோ வெளியிட்ட கேப்டன் அமெரிக்கா..?

  | May 07, 2019 15:55 IST
Avengers Endgame

துனுக்குகள்

  • ஏப்ரல் 26ல் இப்படம் வெளியானது இப்படம்
  • உலக அளவில் வசூல் சாதனையில் இரண்டாம் இடத்தை பெற்ற படம் இது
  • மார்வெல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது
மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் எல்லா பாகங்களும் உலக சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. அதன் வரிசையில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தைத் தொடர்ந்து இப்படத்தின் நிறைவு பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஏப்ரல் 26 அன்று வெளியானது.
 
வெளியான நாளில் இருந்தே நல்ல வசூல் லாபத்தை பெற்று வந்த இப்படம் 2.18 பில்லியன் டாலர்  அதாவது இந்திய மதிப்புப்படி (15.121 கோடி) வசூல் பெற்றதன் மூலம் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
 
 
இந்நிலையில் அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் கேப்டன் அமெரிக்கவாக நடித்த கிறிஸ் இவான்ஸ் கிளைமாக்ஸ் காட்சி சூட்டிங்கின் போது எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிளைமாக்ஸ் காட்சியின் போது செட் எப்படி இருந்தது என்று காண்பித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில். செட்டில் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த தடையை உடைத்தவன் நான் மட்டும் இல்லை என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்