முகப்புகோலிவுட்

'மேலாளர் இல்ல திருமணம்' - அனைவரையும் நெகிழ வைத்த 'தல' அஜித் : வைரலாகும் வீடியோ

  | February 22, 2020 09:31 IST
Ajithkumar

அஜித் அனைவரையும் வாசலில் நின்று வரவேற்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

துனுக்குகள்

  • அஜித் அனைவரையும் வாசலில் நின்று வரவேற்ற வீடியோ
  • அனைவரையும் நெகிழ வைத்த 'தல' அஜித் : வைரலாகும் வீடியோ
  • படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது
ரசிகர்களின் ஆதரவுடன், வெற்றி நாயகனாக வலம் வருபவர் தான் அஜித் குமார். தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகின்றார். படப்பிடிப்பு வேலைகள் படு ஜோராக நடந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்துக்குக் காயம் ஏற்பட்டது. ஆனால் சிறிது நேர ஓய்விற்குப் பிறகு அஜித் மீண்டும் அன்றே நடிக்கவும் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாகியன. 

இந்நிலையில் நேற்று சென்னையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் தங்கை மகளின் திருமண விழா வெகு விமர்சையாக நடந்தது. தனது மேலாளரின் இல்ல திருமண விழா என்பதால், திருமணத்திற்கு வந்தவர்களை வாசலில் நின்று வரவேற்றுள்ளார் அஜித் குமார்.
நடிகர்கள் புகழின் உச்சம் தொடும்போது பணிவு வருவது இயல்பு. ஆனால் திரையுலகில் இந்த உயரத்தில் இருக்கும் ஒரு நடிகர் தனது மேலாளர் இல்ல திருமணத்தைத் தனது இல்ல திருமணத்தைப் போலப் பாவித்து அந்த நிகழ்வில் பங்கேற்றது அவரது ரசிகர்களை மேலும் குஷியில் ஆழ்த்தியுள்ளது. 
திருமண நிகழ்வின்போது அஜித் அனைவரையும் வாசலில் நின்று வரவேற்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.    

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்