முகப்புகோலிவுட்

ரஜினியின் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ லீக்; படக்குழு அதிர்ச்சி!

  | June 05, 2019 19:20 IST
Darbar

துனுக்குகள்

  • ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார்
  • அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரிக்கிறார்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்' படத்தில் நடிக்கிறார். 
 
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
நயன்தாரா இதற்கு முன்பாக சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 3வது முறையாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
 
இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபர் நடிப்பதாக கூறப்படுகிறது.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
 
 
அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது போட்டோஸ் மற்றும், வீடியோக்கல் லீக் ஆகாமல் இருக்க படக்குழுவிற்கு கடுமையான கட்டுபாடுகள் விதித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படி இருந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து போட்டோஸ்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது ரஜினி காவல்துறை வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து வரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்படி வெளியானது என படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்