முகப்புகோலிவுட்

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் 'வித்யா பிரதீப்' - விரைவில் வெளியாகும் படத்தின் டைட்டில்..!

  | September 17, 2020 15:16 IST
Vijay Sri G

துனுக்குகள்

 • உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் 80-களில்
 • இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் விஜய் ஸ்ரீ ஜி.
 • பிரபல நடிகை வித்யா பிரதீப் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தில் இணைய
உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் 80-களில் வெளியான பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ‘தாதா 87' என்ற படத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் 80, 90-களில் நகைச்சுவையில் மட்டுமின்றி, குணச்சித்திர கேரக்டர்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்த ஜனகராஜ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக வலம் வந்தார். ஜனகராஜ் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவும், கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ட்ரைலர் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. படமும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் விஜய் ஸ்ரீ ஜி. தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் ஜி மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறார் விஜய் ஸ்ரீ ஜி அவர்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை வித்யா பிரதீப் நடிக்க  உள்ளார். விரைவில் இந்த படத்தில் இணைய உள்ள நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com