முகப்புகோலிவுட்

'கலாம் சலாம்' - மறைந்த ஏவுகணை நாயகனுக்கு 'உலக நாயகனின்' மெய்நிகர் அஞ்சலி..!

  | July 27, 2020 15:59 IST
Apj Kalam

துனுக்குகள்

 • மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
 • ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும்
 • இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகள் ஷேக் தாவூத்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடனான நினைவுகளை உலகநாயகன் பத்ம பூஷன் கமல் ஹாசன் அவர்கள் மெய்நிகரி மூலம் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்த இருக்கிறார். மக்களின் ஜனாதிபதி திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் மறைந்த 5-ம் ஆண்டு தினத்தில் டிஜிட்டல் ஊடகம் மூலம் மெய்நிகர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ரெயின்ட்ராப்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. 

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ரெயின்ட்ராப்ஸ் அமைப்பானது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அமைப்பு மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் அவர்களின் இல்லத்தினருடன்  இணைந்து நம் நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவி வகித்த திரு. ஏபி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீலை 27ந்தேதி மாலை 7 மணிக்கு "கலாம் சலாம்" என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மெய்நிகர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது. ரெயின்ட்ராப்ஸ் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் சமூக வலைதள பக்கங்கள், யூடியூப் சேனல், மற்றும் டோக்கியோ தமிழ் டிவி, விஜிபி உலக தமிழ் சங்கம்  சமூக வலைதள  பக்கங்களில்  கலாம் சலாம் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது.

பல்வேறு தலைமுறையினர் டிஜிட்டல் ஊடகம் மூலம் இணையும் நிகழ்வின்  மூலம் நம் அனைவருக்குள்ளும் திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்தியாவின்  மிசைல் மேன் என்று போற்றப்படும் அவரது வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அரிச்சுவடுகள் ஆயிரம் என்பது முற்றிலும் உண்மை. கொரோனா தாக்கம் அதிகமிருக்கும் இந்த கால கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிட்டது. அந்த வகையில், காலம் சென்ற டாக்டர் அப்துல் மீது இன்றளவும் பற்றுதலும், பேரன்பும் கொண்ட அனைத்து நல் உள்ளங்களும் டிஜிட்டல் ஊடகம் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  உலக நாயகன் திரு கமல்ஹாசன் கலந்துக்கொண்டு, அப்துல் கலாம் அவர்களுடனான தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

இந்நிகழ்ச்சி குறித்து ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனர் திரு.அரவிந்த் ஜெயபால் கூறுகையில், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட உலகெங்கும் உள்ள பல்வேறு சாதனையாளர்கள் கலாம் சலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மெய்நிகரி வாயிலாக அஞ்சலி செலுத்த உள்ளனர். அப்துல் கலாம் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மறைந்தும் இருக்கிறார் என்பதை சாதனையாளர்கள் பலரும் இந்த உலகிற்கு வலுவாக எடுத்துரைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது. என்னுடன் இணைந்து டாக்டர் அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் இல்லத்திலிருந்து இந்நிகழ்வை தொகுத்து வழங்க உள்ளனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com