முகப்புகோலிவுட்

மெர்சல் காட்டும் விஜய்யின் ‘ஆளப்போரான் தமிழன்’

  | April 12, 2019 14:32 IST
Mersal

துனுக்குகள்

  • இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கி இருக்கிறார்
  • ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான இது
அட்லி இயக்கத்தில விஜய் நடித்து கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் மெர்சல். இந்த படத்தில் முதல் முறையாக 3 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
h1ogpst

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்' படத்தில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபத்திய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
 
r5hstnm8

யூடியூப்பில் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியிருக்கிறது.  ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் வரிகளில் கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இந்த பாடலை பாடியுள்ளனர். தமிழையும், தமிழர்களின் பெருமையையும் சொல்லும் வரிகளில் இந்த பாடல் நாடு முழுவதும் உள்ள பட்டிதொட்டி எங்கும் பரவியிருக்கிறது.
 
3rqda2so

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்திடல நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
   
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்