முகப்புகோலிவுட்

விஜய்சேதுபதியாக நடிக்கும் அமீர் கான்!!!

  | August 05, 2019 15:49 IST
Aamir Khan

துனுக்குகள்

  • கடந்த 2017ல் வெளியான இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது
  • மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடிக்கிறார்
  • விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார்
இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘விக்ரம் வேதா'. விஜய்சேதுபதி கேங்ஸ்டராகவும், மாதவன் காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற மொழிகளில் இயக்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தி பதிப்பில் அமீர்கான் மற்றும் சைஃப் அலிகான் நடிக்க உள்ளனர். தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இந்தியிலும் இயக்க உள்ளனர்.
 
மாதவன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் விஜய்சேதுபதி நடித்த தாதா கதாபாத்திரத்தில் அமீர்கானும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்தியிலும் இப்படத்திற்கு விக்ரம் வேதா என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்