முகப்புகோலிவுட்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி வெளியிட்ட நன்றி வீடியோ!

  | August 20, 2019 13:53 IST
Bigg Boss

துனுக்குகள்

 • நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்
 • பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நன்றி கூறி வீடியே வெளியிட்டுள்ளார்
 • அஜித் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி கூறியிருக்கிறார் இவர்
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை அபிராமி. படம் வெளியாவதற்கு முன்பே தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகர்ச்சிக்கு சென்று விட்டார். இதனால் நேர்கொண்ட பார்வை படத்தை இவர் பார்க்கவில்லை. இந்த வார நாமினேஷனில் இருந்த அபிராமி இந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த கையோடு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில்,
 
“உங்க எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று ஒரு வீடியோ போட வேண்டும் என்று நினைத்தேன். உங்களுடைய ஆதரவுக்காகவும், நம்பிக்கைக்காவும், நீங்கள் அளித்த ஓட்டுக்காகவும், உங்களுடைய அன்புக்காகவும் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்றிருக்கிறார்.
 
இதனை அடுத்து தான் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களோடு கண்டு களித்துள்ளார். இப்படத்திற்கு ஆதரவு அளித்துள்ள அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் போனிகபூர், முக்கியமாக அஜித் சாருக்க என்னுடைய மனமார்ந்த நன்றி என் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com