முகப்புகோலிவுட்

இந்தியன் 2 ஷூட்டிங்கில் விபத்து - லைக்கா நிறுவனம் மீது வழக்குப் பதிவு

  | February 22, 2020 08:19 IST
Lyca Production

கிரேனின் உரிமையாளர், புரொடக்‌ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

துனுக்குகள்

 • இந்தியன் 2 ஷூட்டிங்கில் விபத்து
 • லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு
 • லைக்கா நிறுவனத்தின் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் சங்கர் இய்யாக்கத்தில் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP Film City என்ற இடத்தில் நடந்து வருகின்றது. கடந்த புதன்கிழமை படப்பிடிப்பு நடந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த ராட்சச கிரேன் ஒன்று சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குநர் சந்திரன், மற்றும் மது ஆகிய மூன்று பெரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தற்போது, படப்பிடிப்பின்போது நடத்த இந்த விபத்திற்காகச் சென்னை நசரத்பேட்டை போலீசார் லைக்கா நிறுவனத்தின் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளான கிரேனின்  உரிமையாளர், புரொடக்‌ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com