முகப்புகோலிவுட்

ஹர்பஜன்- லாஸ்லியா கூட்டணியுடன் இணைந்த ஆக்‌ஷன் கிங்..!

  | February 18, 2020 16:57 IST
Friendship

கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இணைந்து நடிக்கும் ‘Friendship’ திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார்.

கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இணைந்து நடிக்கும் ‘Friendship' திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகும் தமிழ் திரைப்படம் ‘ஃப்ரெண்ட்ஷிப்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கவுள்ளனர். ஒரு வேடிக்கையான பொழுதுபோக்கு எனக் கூறப்படும் இப்படத்தில் கிரிக்கெட் ஒரு முக்கிய கூறாக இருப்பதால், படத்தின் படப்பிடிப்பு அடுத்த 20 நாட்களுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் தயாராகும் இந்த படம் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யப்படவுள்ளது. இப்படம் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இப்படி ஒரு மூத்த நடிகர் இணைந்துள்ளது படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்