முகப்புகோலிவுட்

விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஆக்ஷன்’ படத்தின் அதிரடியான டீசர்!

  | September 13, 2019 19:17 IST
Action

துனுக்குகள்

  • தமன்னா இப்படத்திற்காக சிறப்பு பயிற்சிகளை எடுத்துள்ளார்
  • ஐஷ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
  • ஹிப்பாப் தமிழா இசை அமைத்திருக்கும் இப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்
சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவான் வருவேன்' படத்தை அடுத்து இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள படம் ‘ஆக்ஷன்'. இந்த படத்தில் விஷால் நாயனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தமன்னா ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
 
இவர்களுடன், ஐஷவர்யா லக்ஷ்மி, யோகி பாபு, அகன்ஷா பூரி, கபீர் துஹான் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்பாப் தமிழா ஆதி இசை அமைக்கும் இப்படத்தை ஆர்.ரவீந்திரன் தயாரித்து இருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை என்.பி.ஸ்ரீகாந்த் கவனிக்கிறார்.
 

 
இப்படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசரில் கடல், மலை, கட்டிடங்களின் கூரை மீதெல்லாம் தாவுகிறார் விஷால். இவரோடு கூடவே தமன்னாவும் அதிரடியான காட்சிகளில் விஷாலுக்கு நிகராக நடித்திருக்கிறார். திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றவாறு டீசர் முழுவதும் நிரம்பி வழிகிறது ஆக்ஷன் காட்சிகள்.
 
‘வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் சுந்தர் சி க்கு போதிய வரவேற்பை பெறவில்லை என்ற நிலையில் இந்த படத்தை பெரிதும் கவனம் ஏற்று இயக்கி இருக்கிறார் என்பதால் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்