முகப்புகோலிவுட்

திருமண விழாவில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்து போட்ட ஆரவ்.! வீடியோ வைரல்..

  | September 10, 2020 00:55 IST
Raahei

நடிகர் ஆரவ் இளம் நடிகை ராஹி என்பவரை கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் ஆரவ் இளம் நடிகை ராஹி என்பவரை கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி (ஞாயிறு) திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண நிகழ்வில் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் ஒன்றுகூடி selfie-க்களை எடுத்து மகிழ்ந்துள்ளனர். நடிகைகள் பிந்து மாதவி, காயத்திரி ரகுராம், ஆர்த்தி மற்றும் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், வையாபுரி, சினேகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண விழா கொண்டாட்டத்தின்போது, ‘தளபதி' விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘மாஸ்டர்' திரைப்படத்திலிருந்து ‘வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் மணமகன் ஆரவ். பின்னணியில் பலருடன் ஆடிய இந்த சூப்பரான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

‘விஜய் டிவி'யில் நடிகர் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சீசன் 1-ல் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். இவர் 300-க்கும் மேற்பட்ட கமர்ஷியல் மற்றும் பிரிண்டிங் விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்' படத்தில் சிறிய வேடத்திலும், சந்தோஷ் பிரதாப்பின் ‘மீண்டும் வா அருகில் வா' படத்தில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

It doesn't matter if the guy is perfect or the girl is perfect, as long as they are perfect for each other @itssujavarunee @shivakumarr20 @saktivel_vasu @snekan_offl @_nithyashree @talk2ganesh @prettysunshine28 @ssr_aaryann @that.girl.nivi @kaajal_pasupathi @gayathriraguramm @actress_harathi @ranjitmahendran @ashokarsh @zerogravityphotography @marriage_colours @iamharishkalyan @bindu_madhavii #arav #aarav #raaihee #marriage #wedding #lockdown #nikkah #muslimmarriage #lovemarriage #bigboss #bigbosstamil #marketrajambbs #rajabheema #Corona #sep6 #sepetember #congratulations #happymarriedlife #quarantinemarriage #lockdownmarriage #aravwedsraahei #bride #groom #vijaytv #vijaytelevision #behindwoods #galattatamil #cineulagam #behindwoodsash #behindwoodsair

A post shared by aravraahei👫 (@aravraaheifamily) on

ராஜ பீமா, நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம். தற்போது இந்த படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது...“ராஜ பீமா” படக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். இந்த திருநாள் விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான் எங்கள் படத்தில் மிகமுக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com