முகப்புகோலிவுட்

'கொரனாவை வெல்வோம், தரமாக வாழ்வோம்..!!' - "காலா" பாணியில் மாஸ் காட்டும் சூரி..!!

  | July 11, 2020 09:21 IST
Soori Photoshoot

துனுக்குகள்

  • தமிழ் திரையுலகில் ஆரம்ப காலத்தில் பல சிறிய சிறிய கதாபாத்திரங்களில்
  • இந்த கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில், தனது வேடிக்கையான வீடியோக்களையும்
  • இந்நிலையில் காலா பட பாணியில் போட்டோ வெளியிட்டு
தமிழ் திரையுலகில் ஆரம்ப காலத்தில் பல சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க ம்ஹடியாத காமெடி நடிகராக மாறியுள்ளார் சூரி. சூரி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துத் வருகின்றார். அதே சமயம், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது பலருக்கும் தெரியும். 

அவர், இந்த கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில், தனது வேடிக்கையான வீடியோக்களையும் படங்களையும் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தனது நகைச்சுவையான பாணியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தனது ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மதுரைக்கு அருகிலுள்ள தனது சொந்த ஊரில் தனது குடும்பத்துடன் சிறப்பாக நேரத்தை செலவிட்டு வரும் அவர், ஒரு ஜல்லிக்கட்டு காளையுடன் வலம் வரும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டு மாஸ் காட்டி வந்தார். இந்நிலையில் காலா பட பாணியில் போட்டோ வெளியிட்டு "கொரனாவை வெல்வோம், தரமாக வாழ்வோம்.!!" என்று குறிப்பிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com