முகப்புகோலிவுட்

"மனித உயிர்கள் முக்கியம்" - என்.எல்.சி விபத்து குறித்து கமலின் காட்டமான பதிவு..!!

  | July 02, 2020 16:35 IST
Nlc Accident

துனுக்குகள்

 • இன்னும் இந்த 2020ம் ஆண்டு மக்களுக்கு என்ன கொடுக்க காத்துள்ளது
 • இந்த நிகழ்வு குறித்து தனது கருத்தினை வெளியிப்படுத்தியுள்ளார்
 • விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே
இன்னும் இந்த 2020ம் ஆண்டு மக்களுக்கு என்ன கொடுக்க காத்துள்ளது என்று பலரும் வருத்தப்படுமளவுக்கு பல சோக நிகழ்வுகள் அனுதினம் நடந்தேறிய வண்ணமே உள்ளது என்றால் அது மிகையல்ல. நேற்று ஜூலை 1ம் தேதி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. 

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து  தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் அவர்கள். அவர் வெளியிட்டுள்ள பதிவில் "கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்".என்று அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இது போன்ற விபத்து மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com