முகப்புகோலிவுட்

‘ராணி தேனீ’யை வெளியிட்ட ஆர்யா..!

  | March 10, 2020 10:20 IST
Rani Theni

எஸ். ஞானகரவேல் வரிகளில் ஹரிசரன் பாடியுள்ள இப்பாடல் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்திலிருந்து ‘ராணி தேனீ' எனும் பாடல் முதல் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் மெலடி பாடலை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எஸ். ஞானகரவேல் வரிகளில் ஹரிசரன் பாடியுள்ள இப்பாடல் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

VJ சுரேஷ் ரவி மற்றும் பிரபல (ஹீரோயின்) டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி நடிக்கும் திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்'. இப்படத்தை RDM இயக்கியுள்ளார். ஒரு மோசமான காவல்துறை அதிகாரிக்கும் சாதாரண இளைஞனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமாக இப்படத்தின் களம் அமைந்துள்ளது. அந்த முக்கிய காவல்துறை அதிகாரியாக மைம் கோபி நடித்துள்ளார்.

இப்படத்தை BR Talkies Corporations மற்றும் White Moon Talkies பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு கே.எஸ் விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் - விமல்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். மேலும் இப்படத்துக்கு ஆதித்யா - சுர்யா இசையமைத்துள்ளனர்.

வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படத்தைப் போலவே மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இப்படம் இம்மாதம் 20-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com