முகப்புகோலிவுட்

"இயக்குநர் சாந்தகுமார் மிகுந்த அர்ப்பணிப்புத் தன்மையுடைய இயக்குநர்" - நடிகர் ஆர்யா ஓபன் டாக்

  | August 31, 2019 18:58 IST
Arya

துனுக்குகள்

  • மகாமுனி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது
  • மௌனகுரு படத்தை இயக்கிய சாந்த குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • இந்த படத்தில் மகிஹிமா நம்பியார், இந்துஜா இருவர் நடித்துள்ளனர்
மௌனகுரு படத்தை இயக்கிய சாந்த குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் 'மகாமுனி'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். 

இதில் நடிகர் ஆர்யா பேசும்போது,
 
 “இந்தப் படத்தின் டீஸருக்கும், காட்சி முன்னோட்டத்திற்கும் கிடைத்த ரெஸ்பான்ஸ், எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
 
சாந்தகுமாரிடம் ‘இந்தப் படத்தின் கதையைத் தயார் செய்ய எதுக்கு எட்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க?' என்று கேட்டேன். அதுக்கு அவர் ‘ஞானவேல்ராஜா சார்கிட்ட அட்வான்ஸ் வாங்கி அதுல ஒரு பைக் வாங்கினேன்.அந்த பைக்லயே இந்தியாவைச் சுத்திப் பார்க்க போயிட்டேன். இப்போ அடுத்து சைக்கிளும் வாங்கப் போறேன்'னாரு.. ‘ஒரு பைக் வாங்கியே அடுத்தப் படத்தைத் தயார் செய்ய எட்டு வருஷமாச்சுன்னா.. அடுத்து சைக்கிள் வாங்கினா என்னா ஆகும்.. நீங்க அடுத்து பிளைட்டுதான் சார் வாங்கணும்'னு சொன்னேன்.
 
இந்தப் படத்தின் முழுக் கதையையும் சாந்தகுமார் என்னிடம் சொல்லவில்லை. முதலில் ‘மகா' கதாபாத்திரத்தின் பகுதியை மட்டுமே சொன்னார்.
 
பிறகு ‘முனி' கதாபாத்திரத்தை கடைசியாக உங்களிடமிருந்து வெளிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
 
இயக்குநர் சாந்தகுமார் மிகுந்த அர்ப்பணிப்புத் தன்மையுடைய இயக்குநர். அது எப்படியெனில் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருக்குமே ஒரு வரலாற்றையே தயார் செய்து வைத்திருந்தார்.
 
நாயகிகள் இந்துஜா, மஹிமா மற்றும் சக நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் அது எனக்கும் ஒரு எனர்ஜியை அளித்த்து. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும் மிகவும் அருமையாக பணியாற்றியிருக்கிறார்.
 
இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்தமைக்காக இயக்குநர் சாந்தகுமார் சாருக்கு எனது நன்றிகள்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்