முகப்புகோலிவுட்

1000 கிலோ அரிசி உதவிய பார்த்திபன்; நன்றி தெரிவித்த லாரன்ஸ்..!

  | May 05, 2020 11:10 IST
Parthiban

மேலும் விஜய், அஜித், கமல் ஹாசன், சூர்யா உள்ளிட்ட அனைத்து பெரிய நடிகர்களும் முன்வந்து இந்த முயற்சியை ஆதரிக்குமாறு லாரன்ஸ் கேட்டுக்கொண்டார்.

இயக்குநர்-நடிகர் பார்த்திபன், ராகவா லாரன்ஸின் ‘தாய்' முன்முயற்சிக்காக 1000 கிலோ அரிசியை வழங்கியுள்ளார். தேவைப்படும் மக்களை எளிதில் அணுகுவதற்கான முயற்சியை லாரன்ஸ் தொடங்கியுள்ளார். முன்னதாக சூப்பர் ஸ்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 100 அரிசி மூட்டைகளை நன்கொடையாக வழங்கியிருந்தார்.

லாரன்ஸ் தனது தாயின் பிறந்தநாளான மே 2-ஆம் தேதி இந்த முயற்சியைத் தொடங்கினார். அன்று, லாரன்ஸின் தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வீடியோவை பார்த்திபன் வெளியிட்டார். அந்த விடியோவை லாரன்ஸ் தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு “என் அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பார்த்திபன் சாருக்கு பெரிய நன்றி. என்னையும் என் குடும்பத்தினரையும் நீங்கள் நேசித்ததற்கு நன்றி. உங்கள் வீடியோவைப் பார்த்து நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம், எனது கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டதற்கும், கொரோனா நிவாரணத்திற்காக 1000 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதற்கும் நன்றி, எங்கள் குழு ‘தாய்' முன்முயற்சியின் மூலம் பசியால் பாதிக்கப்பட்டுள்ள சரியான மக்களுக்கு விநியோகிக்கும், மேலும் விவரங்களை நாங்கள் விரைவில் உங்களுக்கு தெரிவிப்போம். உங்களுக்கு பெரிய இதயம் இருக்கிறது, மேலும் பல இடங்களிலும் நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், உங்கள் நண்பனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் யார் நன்கொடை அளிக்க விரும்புகிறாரோ அவர் ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "ஒரு கைப்பிடி அரிசி கூட பலரின் பசியை நிரப்பும், சேவையே கடவுள்" என்றார். மேலும் விஜய், அஜித், கமல் ஹாசன், சூர்யா உள்ளிட்ட அனைத்து பெரிய நடிகர்களும் முன்வந்து இந்த முயற்சியை ஆதரிக்குமாறு லாரன்ஸ் கேட்டுக்கொண்டார் .

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com